பதில் சொல்லிட்டு போங்க: சுரேஷை வச்சு செஞ்ச வேல்முருகன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை யாருடன் சண்டை போடவில்லை என்பதை மட்டும்தான் கணக்கு பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது. கிட்டத்தட்ட அனைவரிடமும் கேலியும் கிண்டலுமாக பேசி வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார் என்பது கடந்த ஒரு வார நிகழ்ச்சியில் இருந்து தெரியவருகிறது.
இந்த நிலையில் அப்பாவியாக வெள்ளேந்தியாக இருந்து வரும் பாடகர் வேல்முருகன் இன்று சுரேஷூக்கு எதிராக பொங்கி எழுந்த காட்சிகள் இன்றைய இரண்டாம் புரமோவில் உள்ளது சமீபத்தில் டாஸ்க் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சுரேஷ் சக்ரவர்த்தி தனக்கு வேஷ்டி கொடுத்ததாக பாடகர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். அந்த வேஷ்டி கொடுத்ததை சுரேஷ் சொல்லிக் காட்டி இருப்பார் போல் தெரிகிறது.
இதனால் பொங்கி எழுந்த வேல்முருகன் ’நான் உங்களிடம் வேஷ்டியை கேட்டேனா, அதை ஏன் சொல்லிக்காட்டி அசிங்க படுத்துகிறீர்கள்’ என்று ஆவேசமாக கூற, அவரை சமாளிக்க முடியாமல் சுரேஷ் நழுவ முயற்சிக்கிறார். ஆனாலும் விடாமல் வேல்முருகன் அவரை துரத்தி துரத்தி வந்து ஆவேசமான அவரை கேள்வியால் துளைத்தெடுப்பது சக போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆனால் வேல்முருகனின் கோபத்தை கண்டுகொள்ளாமல் சாப்பிட ஆரம்பிக்கும் சுரேஷ், ‘பரட்டை பத்த வச்சிட்டியே’ பரட்ட’ என்று கூறுவதுடன் இரண்டாம் புரமோ முடிவு பெறுகிறது.
ஏழைகளுக்கு தன்மானம் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் அவரிடமும் தனது வேலையை காட்டிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
#Day9 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ABctsh3UOw
— Vijay Television (@vijaytelevision) October 13, 2020