close
Choose your channels

இந்த குட்டிப்பாப்பா ஒரு நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்: யாரென கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலக நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே. நடிகை யாஷிகா தமிழ் திரையுலகில் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், குறிப்பாக அவர் நடித்த ’நோட்டா’ ’கழுகு-2’ ’ஜோம்பி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகாவுக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான அளவில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தான் சிறுவயதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் சிறு வயதில் உள்ள யாஷிகாவின் புகைப்படத்திற்கும், டீன் ஏஜில் இருக்கும்போது எடுத்த புகைப்படத்திற்கும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ’இவன்தான் உத்தமன்’ ’ராஜபீமா’ ’கடமையை செய்’ ’பாம்பாட்டம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz