அஜித், விஜய் வசனங்களை மெசேஜ் ஆக கூறிய கவின், லாஸ்லியா

  • IndiaGlitz, [Saturday,August 17 2019]

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் சேரன் நடுவராக இருந்தார். இந்த டாஸ்க்கில் மெசேஜ் கூறிய ஒருசிலர் மறைமுகமாக ஒருசிலரை தாக்கும் வகையில் இருந்தது

சாண்டி: மேய்ற மாட்டை நக்குற மாட்டை கெடுக்குற மாதிரி சும்மா இருந்த என்னை சொறிஞ்சு விட்டாங்க குருநாதா! வெளியில ஹேப்பியா இருந்தேன், உள்ளே கோர்த்து விட்டுட்டாங்களே

கவின்: ஒருத்தங்க மேல் இருக்குற விஸ்வாசத்தை காமிக்க, எதுக்காக இன்னொருத்தர அசிங்கப்படுத்துறீங்க' என்ற அஜித்தின் நேர் கொண்ட பார்வை வசனத்தை பேசிய கவின், அதன்பின் 'கண்ணா இது சும்மா டிரைலர் தாம்பா, இன்னும் மெயின் பிக்சரை பார்க்கலையே, பார்த்த ... ஆடிப்போயிருவ' என்று ரஜினியின் வசனத்தையும் மெசேஜ் ஆக கூறினார்

முகின்: வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா, என்ற பாடலை பாடிவிட்டு வாழ்க்கையில் பல தடைக்கல் இருந்தாலும் அதை படிக்கல்லா பாருங்க' என்ற ஒரு மெசேஜை கூறிச்சென்றார்

வனிதா: வந்துட்டேன்னு சொல்லு, வனிதா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, 25 நாளுக்கு முன் எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, ஐ அம் பேக்

அபிராமி: ஒரு ராப் பாடலை பாடினார்

ஷெரின்: இந்த வீட்டில இருக்குறவங்க பிரச்சனையை பேசிப்பேசி ரொம்ப போர் ஆயிட்டேன். இப்போ என் ஹேண்ட் கூட என்கிட்ட பேச மாட்டேங்குது

லாஸ்லியா: உசுப்பேத்துகிறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துகிறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். ஆனால் இங்க அப்படி இருக்க விடமாட்டாங்க

கஸ்தூரி: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கருத்துக்கு கஸ்தூரி, கேப்டனுக்கு மதுமிதா, கமலுக்கு அகம் கண்டண்ட் வேறு ரகம், கலருக்கு எல்லோ, ஆப்புக்கு ஹலோ, அன்புக்கு நீங்கள் நன்றிக்கு நான்,

மேற்கண்ட மெசேஜில் விஜய் வசனத்தை லாஸ்லியாவும், அஜித், ரஜினி வசனத்தை கவினும், வனிதா கூறிய 'கபாலி' வசனமும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அபிராமி சிறந்த மெசேஜ் சொன்னவர் என தேர்வு செய்யப்பட்டார். தர்ஷன் மற்றும் மதுமிதா கூறிய மெசேஜை சேனல் ஒளிபரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டிலில் தேசியப்பற்று!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தலை பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், ரிலீஸ் ஆன அனைத்து திரையரங்குகளிலும்

துருவ் விக்ரம் பாடிய 'ஆதித்ய வர்மா' பாடல் வரிகள்

துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் இந்த படத்திற்காக பாடிய 'எதற்கடி வலி தந்தாய்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஆர்யாவின் வெற்றிக்காக வாழ்த்திய சூர்யா!

நடிகர் ஆர்யா ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு சைக்கிள் ரைடர் என்பதும், தேசிய அளவில் பல்வேறு சைக்கிள் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரிந்ததே

அண்ணா கூறியதைத்தான் ரஜினியும் கூறினார்: அதிமுக அமைச்சரும் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி - அமித்ஷா குறித்தும்

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா-ஜூலி இணைந்து நடிக்கும் பயங்கர கேம் திரைப்படம்!

பிக்பாஸ் முதல் சிசனில் கலந்து கொண்ட ஜூலியும், பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு பயங்கரமான கேம் படத்தில் நடிக்கின்றனர்.