close
Choose your channels

மீராவுக்கு எதிராக களமிறங்கிய 11 போட்டியாளர்கள்: என்ன செய்வார் பிக்பாஸ்?

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வனிதாவுக்கு இணையாக பிரச்சனை கொடுத்து கொண்டிருப்பவர் மீராமிதுன் என்பது தெரிந்ததே. வனிதாவை வெளியேற்றிய பின்னர் பிக்பாஸ் வீடு ஓரளவு அமைதியாக இருந்தாலும் மீராவால் தினமும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வனிதா சத்தமாக பேசினாலும் ஒரு விதத்தில் வெகுளி போல் காணப்பட்டார். ஆனால் மீரா வஞ்சகத்தின் மொத்த உருவமாக பார்வையாளர்களாலும், சக போட்டியாளர்களாலும் பார்க்கப்படுகிறார்.

இதனால்தான் நேற்றைய நாமினேஷன் படலத்தில் மீராவை 11 பேர் நாமினேட் செய்தனர். மீராவை தவிர வீட்டில் மொத்தமே 13 பேர்கள் தான் உள்ளனர். அவர்களில் 11 பேர் மீராவை நாமினேட் செய்துள்ளனர் என்றால் அவரால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது. மீராமிதுனை லாஸ்லியா, தர்ஷன், முகின், சேரன், சாண்டி, மோகன் வைத்யா, ரேஷ்மா, மதுமிதா, அபிராமி, ஷெரின், கவின் ஆகியோர் நாமினேஷன் செய்துள்ளது.

மீராவை அடுத்து சரவணன் தேவையில்லாமல் சில வேலைகளையும் ஒருசிலரின் மனம் புண்படும் வகையில் பேசுவதாலும் அவரை மோகன் வைத்யா, ரேஷ்மா, அபிராமி, ஷெரின், தர்ஷன், முகின், சேரன் ஆகியோர் நாமினேஷன் செய்துள்ளனர்.

மீரா, சரவணனை தவிர சேரன், மோகன் வைத்யா மற்றும் அபிராமி ஆகியோர்களும் இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளனர். பார்வையாளர்களின் வாக்குகள் மீராவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் கடந்த வாரம் வனிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், இந்த வாரம் மீராவை வெளியேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.