close
Choose your channels

'தனியா இருப்பிங்களா? கூட்டணி வைப்பீங்களா? கமலிடம் அசத்தல் கேள்வி 

Sunday, July 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரிடம் கேள்வி கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று பார்வையாளர் ஒருவர் தொலைபேசியில் அழைத்த போது அவர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அவரது கேள்வி இதுதான்: செந்தில் போல் கவுண்டமணியுடன் எப்போதும் சேர்ந்து இருப்பீர்களா? அல்லது வடிவேல் போல் தனியாக இருப்பீர்களா? என்பதுதான் கேள்வி. இந்த கேள்வி கமல்ஹாசனின் அரசியல் நிலையை மறைமுகமாக கேட்பது போல் தெரிகிறது.

அதாவது கமல்ஹாசன் அரசியலில் இனி வரும் காலத்தில் தனித்து இருப்பாரா? அல்லது கூட்டணி வைப்பாரா? என்பதை மறைமுகமாக கேட்கும் வகையில் இந்த கேள்வி இருந்ததாக கருதப்படுகிறது. இந்த கேள்விக்கு கமல்ஹாசன் என்ன பதில் என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.