close
Choose your channels

வனிதா குரூப்பில் இணைந்த மீராமிதுன்! தனித்துவிடப்பட்ட மதுமிதா

Saturday, July 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வனிதா தலைமையிலான ஒரு குரூப்பும், மதுமிதா தலைமையிலான ஒரு குரூப்பும் உண்டாகியது. 'தமிழ்ப்பெண்' என்ற ஒரே ஒரு வார்த்தையை பயன்படுத்தியதால் மட்டுமே ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பமும் மதுமிதாவுக்கு எதிராக களமிறங்கியது.

'தமிழ் வாழ்க' என பாராளுமன்றத்திலேயே நம்மவர்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் 'தமிழ்ப்பெண்' என்று கூறியது ஒரு குற்றமா? என பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று கமல் தோன்றும் புரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரை வெளியேற்ற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல் கேட்க, கிட்டத்தட்ட எல்லோருமே மதுமிதாவை கைகாட்டுகின்றனர்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவெனில் வனிதாவுக்கும் மீராவுக்கும் சண்டை நடந்தபோது மீராவுக்கு மதுமிதாதான் ஆறுதல் கூறினார். ஆனால் நேற்று திடீரென வனிதாவிடம் மீரா சமாதானம் அடைந்து அவரும் இன்று மதுமிதாவுக்கு எதிராக வாக்களித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று கமல்ஹாசன், மதுமிதா 'சேஃப்' என்று கூறினால், அவருக்கு எதிராக வாக்களித்த அத்தனை பேர் முகமும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவாவது இன்றைய நிகழ்ச்சியை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.