close
Choose your channels

7 பேர்களும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Wednesday, September 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் டாஸ்க் ஆரம்பத்ததிலிருந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக சாண்டி, தர்ஷன், முகின் ஆகியோர் அதிக தீவிரம் எடுத்து விளையாடி வருகின்றனர்

இந்த நிலையில் இன்றைய அடுத்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய படத்தை உருவாக்கும் வகையில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை மற்றவர்கள் பந்துகளால் எறிந்து வீழ்த்த வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

இதனை அடுத்து ஏழு பேரும் அவர்களுடைய படத்தை உருவாக்கி வரும் நிலையில் மற்றவர்கள் அதனை பந்துகளால் எறிந்து தகர்த்து வருகின்றார்கள் கிட்டத்தட்ட அனைவருடைய படங்களும் தகர்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாலும் இந்த டாஸ்க்கில் ஷெரின், சேரன், தர்ஷ, முகின் ஆகியோர்கள் மிகவும் தீவிரமாக விளையாடியதாக மூன்றாவது புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.