ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஒவ்வொரு திங்கள்கிழமையும் எவிக்சன் பட்டியலுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்படும் நிலையில் இன்று வித்தியாசமாக காப்பாற்றப்படும் நபர்களின் பெயர்களை பிக்பாஸ் கேட்கின்றார்.

முதலில் கன்பக்சன் அறைக்கு வரும் தர்ஷன், தான் ஷெரினை காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார். இதனை அடுத்து ஷெரின் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனை விதிக்க, அதன்படி சேர்ந்த ஒரு பச்சை மிளகாயை காரசாரமாக சாப்பிடுகிறார் தர்ஷன்.

இதனை அடுத்து இன்னொருவரை காப்பாற்ற வேண்டும் என்றால் இன்னொரு பச்சைமிளகாயை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் நிலையில் சாண்டிக்காக இன்னொரு பச்சை மிளகாயையும் அவர் சாப்பிடுகிறார்.

தர்ஷனை போலவே மாற்ற போட்டியாளர்கள் யார் யாருக்காக பச்சைமிளகாயை சாப்பிடுகிறார்கள் என்பதை இனிவரும் புரோமோ வீடியோக்களில் பார்ப்போம்.

More News

இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்

நடிகர் விஜய் சமீபத்தில் தனது 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அதிகபட்சமாக ஒரு 15 நிமிடங்கள் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியதை வைத்து

அசுரனுக்கு ஆஸ்கார் மிஸ் ஆகாது: கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்காரை மிஸ் செய்யாது என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

அஜித்தை எடுத்து ஜெயம் ரவி பக்கம் திரும்பிய போனிகபூர்

அமிதாபச்சன் நடித்த 'பிங்க் என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் படமான அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த போனிகபூர், இந்த படத்தின் வெற்றியால்

விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை: பழ கருப்பையா

விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று 'சர்கார்' படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.