சேரன், வனிதாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் வனிதா, சேரன் ஆகிய இருவரையும் தர்ஷன் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய காட்சிகள் உள்ளன.

கடந்த வார டாஸ்க்கில் வெற்றி பெற்ற வனிதா டீமில் இருந்து இரண்டு பெஸ்ட் ஃபெர்மார்மென்ஸ் செய்தவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூற, அதற்கு வனிதா, தன்னையும் தர்ஷனையும் தேர்வு செய்து கொண்டு சேரனை வார முழுவதும் பெஸ்ட்டாக செய்தவர் என்பவராக தேர்வு செய்யலாம் என்று கூறினார். ஷெரின் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியால் அவரது பெயரை வனிதா பரிசீலனை செய்யக்கூட இல்லை.

வனிதாவிடம் இதற்காக வாதாடி மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்பதால் ஷெரின் அமைதியாக இருந்தார். வனிதா என்ன கூறினாலும் தலையாட்டும் சேரன், இதற்கும் தலையாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெஸ்ட் ஃபெர்மார்மென்ஸ் செய்தவர்களை நான்கு பேர்களும் சேர்ந்து தானே தேர்வு செய்ய வேண்டும்? அப்படித்தான் நடந்ததா? என கமல் கேட்க அதற்கு வனிதாவும், சேரனும் நால்வரும் சேர்ந்தே தேர்வு செய்ததாக கூறினர். ஆனால் தர்ஷன் அதற்கு ‘இல்லை’ என்று கூறியதால் வனிதா, சேரன் ஆகிய இருவருக்கும் தர்மசங்கடமாயிற்று. இதற்காக வனிதா நிகழ்ச்சி முடிந்ததும் தர்ஷன் மீது பாயப்போகிறார் என்பது தெரிகிறது.