close
Choose your channels

முதல்முறையாக ஓப்பன் நாமினேஷன்: முகத்திரைகள் கிழியுமா?

Monday, July 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் நபரை நாமினேஷன் செய்யும் படலம் நடைபெற்று வருகிறது. இந்த நாமினேஷன் படலம் இதுவரை கன்ஃபக்சன் அறையில் ஒவ்வொருவராக வந்து தனித்தனியாக ரகசியமாக தெரிவித்து விட்டு போவார்கள். இதனால் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்று தெரியாத நிலையில் முதல் முறையாக இன்று பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் படலம் நடைபெறுகிறது

இதனால் யார் யாரை நாமினேஷன் செய்வார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும். இதனையடுத்து போட்டியாளர்களின் உண்மையான முகத்திரை கிழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நபராக லாஸ்லியா இருவரை நாமினேட் செய்ய வருகிறார். அவர் நாமினேட் செய்யும் முதல் நபர் மதுமிதா. சாண்டியுடன் ஏற்பட்ட பிரச்சினை முடிந்து அவர் மன்னிப்பு கேட்ட பின்னரும் கமலஹாசன் முன்னிலையில் நேற்று இந்த பிரச்சனையை அவர் கொண்டு வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்பதால் நாமினேஷன் செய்ததாக லாஸ்லியா கூறுகிறார்.

அடுத்ததாக அவர் சாக்சியை நாமினேஷன் செய்வதாக தெரிகிறது. மற்றவர்கள் யார் யாரை நாமினேஷன் செய்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.