close
Choose your channels

வனிதாவை செமையாய் கலாய்க்கும் கமல்!

Sunday, September 8, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் வனிதா பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும் வரை வேறு யாரும் பேச முடியாது. யாராவது பேச முற்பட்டாலும் ‘ஒன் மினிட்’, ‘நான் என்ன சொல்ல வர்ரேன்னா’ என்று அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் தனது உரையை தொடங்குவார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பேசியவர் என்ற சாதனையை வனிதா பெற்றுள்ளார்.

வனிதாவின் டாமினேஷன் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனிடமும் தொடர்கிறது. கமல்ஹாசன் பேசும்போது கூட அவர் குறுக்கே பேசுவதும், வனிதா பேசிக்கொண்டிருக்கும்போது கமல் குறுக்கிட்டால், ‘ஒரு நிமிஷம் சார் நான் சொல்லி முடிச்சுர்ரேன்’ என்று கூறுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் வனிதாவின் இந்த குணத்தை இன்று கமல் செமியாய் கலாய்ப்பது போன்று முதல் புரமோ வெளிவந்துள்ளது. கமல் பேசும்போது வனிதா குறுக்கே பேச, ‘இருங்க நான் சொல்ல வந்ததை சொல்லிட்ரேன், இல்லாவிட்டால் மறந்துவிடுவேன், மறந்துட்டேன்’ என்று நடிக்க வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. 

இதேபோல் கமல் டிவி முன் தோன்றுவது தெரியாமல் சாண்டி ஹாயாக சோபாவில் படுத்திருக்க, பின் திடீரென எழுந்து ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக கூறும் காமெடியும் இன்றைய புரமோவில் உள்ளது. மொத்தத்தில் வனிதாவுக்கு இன்றும் கமல் பாடம் எடுப்பார் என தெரிகிறது. இந்த பாடம் வனிதா விஷயத்தில் விழலுக்கு இரைத்த நீராகப்போய்விடும் என்பது தெரிந்ததே.

Get Breaking News Alerts From IndiaGlitz