கவின் - கஸ்தூரி மீண்டும் மோதலா? கேமிரா உடைக்கப்பட்டதாகவும் வதந்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரிக்கும் கவினுக்கும் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கஸ்தூரியை 'காக்கா' என கவின் கூற, கவினின் நான்கு பெண்கள் விஷயத்தை மீண்டும் மீண்டும் கஸ்தூரி கிளற, இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டு வந்ததை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மேலும் கமல்ஹாசன் கூட இதுகுறித்து விசாரித்தபோது கஸ்தூரிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும், பழைய பிரச்சினைகளை அவர் மீண்டும் மீண்டும் கிளறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கவினுக்கும் கஸ்தூரிக்கும் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கவின் தன்னை தீய நோக்கத்துடன் தொட்டதாகவும் கஸ்தூரி பிக்பாஸிடம் புகார் கூறியதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. மேலும் கஸ்தூரி கோபத்தில் கேமராவை உடைத்து விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக ஒரு சில மணிநேரங்கள் பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியில் அல்லது புரமோ வீடியோவில் தெரியவரும்.

ஏற்கனவே மதுமிதா காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட மோதலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கஸ்தூரியும் கேமிராவை உடைத்தது பிக்பாஸ் விதிமுறை மீறல் என்பதால் அவரும் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா! அப்பா-மகள் பாசப்போராட்டம் என்ன ஆனது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அப்பா மகள் உறவுடன் இருந்து வந்த சேரன், லாஸ்லியா உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து லாஸ்லியா,

பிக்பாஸ் சீசன் 3ல் இருந்து வெளியே வந்த நடிகைக்கு 'தல 60' பட வாய்ப்பு?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றி நடை போட்டு வரும் நிலையில், அஜித்தின் அடுத்த படமான 'தல 60' திரைப்படத்தின்

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

'அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி, 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி'

மீண்டும் ஒரே ஆண்டில் இரண்டு ரஜினி படங்கள்: ரசிகர்கள் குஷி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் நடித்த 6 படங்கள் மட்டுமே வெளிவந்தது.

மதுமிதாவை அடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தனது அவசர குணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது செயலை கமல்ஹாசனும் சேரனும் நாகரீகமாக கண்டித்தனர்.