close
Choose your channels

மீண்டும் ஆரம்பம் கவின் - லாஸ்லியா காதல்!

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் பின்னர் இந்த காதலில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சாக்சி வெளியேறிய பின்னரும், லாஸ்லியா தன்னுடைய லிமிட் என்ன என்பதை விளக்கிய பின்னரும் இந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கவின் -லாஸ்லியா காதல் மலர்வது போல் தெரிகிறது. இன்றைய அடுத்த புரமோவில் கவின் காதல் டயலாக் பேசுவதும் அதற்கு லாஸ்லியா வெட்கப்படுவதையும் பார்க்கும்போது இருவரும் வெளியே செல்லும்போது ஜோடிகளாகத்தான் செல்வார்கள் என தெரிகிறது

ஏற்கனவே நேற்று முன் தினம் நள்ளிரவு வரை லாஸ்லியாவுடன் கவின் பேசிக்கொண்டிருந்ததை சாண்டி கண்டித்தார். மீண்டும் பிறர் குறைகூறும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு செல்லும்படி கூறினார். ஆனால் சாண்டியின் அறிவுரையை கேட்கும் மனநிலையில் கவின், லாஸ்லியா இருவருமே இல்லை என்பது தெரிகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz