close
Choose your channels

சாக்சியை நாமினேட் செய்த கவின் - லாஸ்லியா: திட்டம் என்ன?

Tuesday, July 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அந்த வாரத்தில் வெளியேறும் நபரை முடிவு செய்ய நாமினேஷன் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் சில அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடந்தது.

கடந்த வாரம் முழுவதும் கவின், லாஸ்லியா, சாக்சி என ஒரு முக்கோண காதல் பிரச்சனை இருந்துவந்த நிலையில் தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. கவினும் சாக்சியும் மீண்டும் இயல்பாக பழக தொடங்கிவிட்டதாக கருதப்படும் நிலையில் நேற்று சாக்சியை கவினும் லாஸ்லியாவும் நாமினேஷன் செய்துள்ளனர். சாக்சியை வெளியேற்றிவிட்டால், தங்களது நட்புக்கு பிரச்சனை இருக்காது என்பதுதான் திட்டமா? என்று தெரியவில்லை.

இந்த வாரம் நாமினேட் செய்தவர்கள் குறித்த விபரங்கள்

சாக்சி: மீரா, சரவணன்
சாண்டி: அபிராமி, சாக்சி
கவின்: சாக்சி, அபிராமி
தர்ஷன்: கவின், சாக்சி
ஷெரின்: மீரா, சரவணன்
அபிராமி: கவின், மீரா
சரவணன்: அபிராமி, சேரன்
சேரன்: கவின், சாக்சி
மதுமிதா: கவின், சாக்சி
முகின்: மதுமிதா, சரவணன்
மீரா: சாக்சி, அபிராமி
லாஸ்லியா: சாக்சி, மீரா
ரேஷ்மா: கவின், சேரன்

சாக்சியை கவின், லாஸ்லியா மட்டுமின்றி சாண்டி, தர்ஷன், சேரன், மதுமிதா, மீரா, ஆகியோர்களும் நாமினேட் செய்துள்ளனர். கடந்த வாரம் நடந்த பிரச்சனையால் சாக்சி மீது பார்வையாளர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் இந்த வாரம் அவருக்கு ஆபத்தான வாரமாகவே கருதப்படுகிறது.

மொத்தத்தில் இந்த வாரம் சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்சி ஆகியோர்கள் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.