கவின், முகினை கண்கலங்க வைத்த டெலிபோன் அழைப்புகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிறு அன்று பார்வையாளர்களில் ஒருவர் தொலைபேசி மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களை தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் வழக்கம் இந்த சீசன் முதல் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை பலர் சாண்டி, லாஸ்லியா உள்பட பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் தற்போது கவின், முகின் ஆகிய இருவருக்கும் இருவர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது அவர்கள் இருவரை மட்டுமின்றி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

கவினை அழைத்த தொலைபேசி அழைப்பாளர், 'கவின் கலையுலக நாயகனாக வளர என்னுடைய வாழ்த்துக்கள் என்றும், வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டினால் மட்டும் போதாது வளர்ந்தும் காண்பிக்க வேண்டும்' என்று ஆசி வழங்கினார்.

இதனையடுத்து முகினின் ஆசிரியை ஒருவர் தொலைபேசியில் கூறியபோது, 'நான் தான் முகினின் ஆசிரியை. வகுப்பில் தினமும் ஏதாவது செய்துவிட்டு முகின் என்னிடம் வந்துவிடுவார். ஏன் என்னிடம் அன்றாடம் முகின் வருகிறார் என நான் யோசித்தபோது அவர் எனது அன்பை தேடித்தான் வந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டேன்' என்று கூற முகின் கண்கலங்கிவிட்டார். இன்றைய இரண்டாவது புரமோ அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் த்ரில் படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்', மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி, தளபதி விஜய்யின் 'பிகில் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கவின், லாஸ்லியாவை எச்சரித்த கமல், சாண்டிக்கும் கண்டிப்பு!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரையும் கமலஹாசன் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நீங்க பொதுவா சொல்லியிருக்கலாம்: கமலிடம் லாஸ்லியா வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லாஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்போது? சாக்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தால் வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனக்குரிய சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் உடனே தரவேண்டும்

எனக்கு ஒரு சின்ன பிட்டு' வேணும் சார்: கமலிடம் வனிதா கோரிக்கை

ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் போட்டியாளர்களின் பஞ்சாயத்துக்கள் விசாரணை செய்யப்படும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது