close
Choose your channels

லாஸ்லியாவுக்காக சேஃப்டிபின் கேட்டு கலாய் வாங்கும் கவின்!

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோஷன்களில் கவின், லாஸ்லியா காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதனை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்த்து வந்தபோதிலும் இதுவே தொடரந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கவின், லாஸ்லியாவை கலாய்த்து சாண்டி வில்லுப்பாட்டு பாடிய நிலையில் அடுத்த புரமோஷனிலும் கவினை காதலை சாண்டி கலாய்ப்பது போல் உள்ளது. 'சேஃப்டிபின் வேண்டும் என்று தர்ஷனிடம் கவின் கேட்க, சேஃப்டிபின் லாஸ்லியாவுக்குத்தானே என்று சாண்டி உள்பட அனைவரும் கலாய்க்க கவினும், லாஸ்லியாவும் வெட்கத்தில் சிரிப்பது இன்றைய புரமோவின் ஹைலைட். போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும்போதே இருவரும் ஜோடியாகத்தான் செல்வார்கள் போல் தெரிகிறது.

மேலும் இன்றைய புரமோவின் பின்னணியில் கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இடம்பெற்ற 'புதுமாப்பிள்ளைக்கு' என்ற பாடலின் பின்னணி இசை ஒலிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.