close
Choose your channels

நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட! கவின் - லாஸ்லியா உரையாடல்

Monday, August 26, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது

இதற்கெல்லாம் காரணம் நான் தானே என லாஸ்லியா வருத்தத்துடன் கேட்க, அதற்கு கவின் 'காமெடி பண்ணாத, நடக்குறது நடக்கும். என்னை காப்பாத்தணும்ன்னு நினைக்குறவங்க, உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கத்தான் பார்ப்பாங்க. இதற்கு லாஸ்லியா, 'நீ உன்னை தவிர மற்றவங்க பத்தி யோசிக்கிறதை மாத்த மாட்டேன்னு நேத்தும் சொன்ன, அதை நீ எப்பவுமே மாத்ததே என்று கூறி மேலும் என்னோட சண்டை போடுங்கம், எனக்காக நிற்காதிங்க' என்று கூறினார்

இதற்கு கவின், 'நான் அப்படியெல்லாம் சண்டை போட்டா, நீங்க டிஸ்டர்ப் ஆகிவிடுவிங்கம், கேம் விளையாட மாட்டீங்க' என்று கூறுகிறார். இருவரின் உரையாடல்களில் இருந்து பார்க்கும்போது இருவரும் கேம் பண்ண முயற்சி எடுப்பது போல் தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, வெளியே சென்ற பின்னரும் தங்களுடைய உறவை தொடரவே விரும்புவதாக தெரிகிறது

மேலும் இன்றைய இந்த உரையாடலில் இருவருமே 'நீங்க' என ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பேசிக்கொள்வதும் புதுமையாக உள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz