பிக்பாஸ் வீட்டை விட்டு இன்றே வெளியேறுகிறாரா கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால், நால்வரில் ஒருவருக்கு மட்டுமே டைட்டில் கிடைக்கும். ஏற்கனவே இறுதி போட்டிக்கு முகின் தகுதி பெற்றுவிட்டதால் மீதியுள்ள மூவரில் இருவர் மட்டுமே இறுதிபோட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதில் பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறும் ஒருவருக்கு மட்டுமே ரூ.50 லட்சம் பரிசு கிடைக்கும். ஆனால் இன்றே வெளியேறும் போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கின்றார். இதனையடுத்து கவின் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

கவினின் இந்த முடிவு லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கவினை செல்ல வேண்டாம் என இருவரும் தடுக்கின்றனர். ஆனால் கவின் தனது முடிவில் உறுதியாக இருப்பார் போல் தெரிகிறது. இருப்பினும் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறுவாரா? அல்லது மனம் மாறுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

More News

ரஜினியை அடுத்து எம்ஜிஆர் டைட்டிலை தேர்வு செய்த பொன்ராம்!

ஸ்க்ரீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ தயாரிப்பில்‌ பொன்‌.ராம்‌ - சசிகுமார்‌ கூட்டணியில் இன்று தொடங்கியுள்ள திரைப்படத்திற்கு  'எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌'

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் அளித்த விளக்கம்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து அந்தத் திரைப்படத்திற்கு நாலாபுறமும் இருந்து பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.

நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று

உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன்