கவினை முன்னாடி பிடிக்கும், இப்ப ரொம்ப பிடிக்கும்: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவின் - அபிராமி காதல், கவின் - சாக்சி, லாஸ்லியா காதல், முகின் -அபிராமி காதல் என ஒருசில காதல்கள் தோன்றி கானல்நீர் போல் மறைந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் கவின் - லாஸ்லியா காதல் மலர்ந்துள்ளது போல் தெரிகிறது.

நேற்றே கவின் அடித்த கமெண்டுக்கு லாஸ்லியா வெட்கப்பட்ட நிலையில் இன்று லாஸ்லியாவும் சேரனும் கவினை மாறி மாறி புகழ்வதை பார்க்கும்போது கவின் மீது லாஸ்லியாவுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அது விரைவில் காதலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

கவினை எனக்கு முன்னாடியே பிடிக்கும், அது இப்ப ரொம்ப பிடிக்கும் இது கவினுக்கே தெரியும் என்று கூறும் லாஸ்லியா, தனக்கு பக்கத்தில் இருப்பவர்களை தட்டிக்கொடுத்து தான் வெளியே போனாலும் பரவாயில்லை என்ற மைண்ட்செட் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை, அந்த எண்ணம் கவினுக்கு இருப்பதாக கூறுகிறார்.

அதேபோல் கவின் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்றும் நண்பர்களை சம்பாதித்துவிட்டால் விரைவில் முன்னேறிவிடலாம் என்றும் தெரியாமல் ஒருசில தவறுகள் கவின் செய்திருந்தாலும் கவின் நல்லவன் தான், கெட்டவன் கிடையாது என்றும் சேரன் கூறுகிறார். மொத்தத்தில் அப்பாவும் மகளும் கவினுக்கு ஐஸ் வைப்பது எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

மீண்டும் இணையும் ராட்சசனின் ராசியான ஜோடி!

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு,

'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன

தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்? மதுமிதாவின் அதிரடி பேட்டி

மதுமிதா டாஸ்க் ஒன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், அதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? த்ரிஷாவின் 'கர்ஜனை' டிரைலர்!

த்ரிஷா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'கர்ஜனை' திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின் தற்போது விரைவில் ரிலீஸாகும் நிலையில் உள்ளது.

'ஜித்தன்' ரமேஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு

'ஜித்தன்' படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியான நடிகர் ரமேஷ் அதன்பின் விஜய்யின் 'ஜில்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இவரது நடிப்பில் 'ஜித்தன் 2' திரைப்படமும் வெளியானது.