நீங்க பொதுவா சொல்லியிருக்கலாம்: கமலிடம் லாஸ்லியா வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லாஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. இதில் லாஸ்லியா கூறியபோது, 'நான் ஒருசில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அது எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது. ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னீர்கள் என்றால் அதை நான் மனதில் வைத்து கொள்வேன்' என்று கமல்ஹாசனிடம் கூற அதற்கு கமல்ஹாசன் 'நான் பொதுவாகத்தான் கூறினேன்' என்று பதிலலித்தார்.

மேலும், 'நான் பெயர் எதுவும் சொல்லாமல் பொதுவாகத்தான் சொன்னேன்' என்று கூறிய கமல், 'பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம்' என்றும் நீங்கள் வீட்டின் உள்ளே செல்லும்போது உங்களுக்கு யாரையும் தெரியாது, அதேபோல் நினைத்து கொண்டு வெற்றிக்காக செயல்படுங்கள்' என்று கூறினார்.

கவினுடன் லாஸ்லியாவுக்கு ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பு காதலாக மாறி வருவதையும், இந்த காதலால் போட்டியில் இருந்து இருவரும் விலகி காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிவதாகவும், போட்டியில் கவனம் செலுத்திவிட்டு வெளியே வந்தவுடன் உங்கள் முடிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்ற ரீதியில் கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது. ஆனால் தற்போது கவின், லாஸ்லியா இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.

More News

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்போது? சாக்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தால் வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனக்குரிய சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் உடனே தரவேண்டும்

எனக்கு ஒரு சின்ன பிட்டு' வேணும் சார்: கமலிடம் வனிதா கோரிக்கை

ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் போட்டியாளர்களின் பஞ்சாயத்துக்கள் விசாரணை செய்யப்படும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது

'தளபதி 64' படத்தின் மாஸ் அப்டேட் இதோ:

தளபதி விஜய் நடிக்கவுள்ள 64வது திரைப்படமான 'தளபதி 64' திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது

நள்ளிரவில் கவின் - லாஸ்லியா என்ன செய்கிறார்கள்? கமல் போட்ட குறும்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க அவ்வப்போது கமல்ஹாசன் குறும்படம் போடுவது உண்டு. அந்த குறும்படத்தில் சிக்கியவர்கள் பாடு திண்டாட்டமாகவே பெரும்பாலும் இருந்து வருகிறது

'இதுக்கு மேல் என் வழியில எவனும் வந்தா... எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 என சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது