தர்ஷனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்த லாஸ்லியா!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை முதல்முறையாக எதிர்த்து பேசிய தர்ஷனுக்கு வனிதாவின் குரூப்பில் இருந்தே ஆதரவு கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அதெல்லாம் உண்மையான ஆதரவா? தர்ஷனை மாட்டிவிட செய்யும் சதியா என்பது போகப்போகத்தான் தெரியும்.

ஆனால் தர்ஷனின் நியாயமான வாக்குவாதத்திற்கு உண்மையாக மனமாற அதே சமயத்தில் யாரும் அறியாமல் மறைமுக ஆதரவு கொடுத்தார் லாஸ்லியா. வனிதாவிடம் சண்டை போட்டுவிட்டு வந்து உட்கார்ந்த தர்ஷனிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில், வழக்கம்போல் இந்த பிரச்சனையிலும் தலையிடாத லாஸ்லியா, தர்ஷனின் கையை குலுக்கி 'நல்ல கதைச்ச' என்று கூறி பாராட்டுக்களை தெரிவித்தார். லாஸ்லியா பாராட்டியதை மற்ற போட்டியாளர்கள் கவனித்ததாக தெரியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியை கூர்ந்து பார்த்தவர்கள் இதனை கவனித்திருக்கலாம்.

தர்ஷனை வனிதாவிடம் ஏற்றிவிட ஒருசிலர் முயற்சி செய்தாலும் தர்ஷனின் இந்த எதிர்ப்பால் வனிதா கொஞ்சம் ஆடிப்போயுள்ளதாக தெரிய வருகிறது. உடனே சமாதானம் அடையும் கேரக்டர் இல்லாத வனிதா, நேற்று இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல், தர்ஷனிடம் சிறிது நேரம் கழித்து விளக்கம் அளித்ததோடு, அவரிடம் சமாதானமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: தொகுப்பாளினியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

திரைப்படங்களில் வாய்ப்பு கேட்க செல்லும்போது தங்களை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பல நடிகைகள் குற்றஞ்சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே

'அருந்ததி 2' படத்தில் அனுஷ்கா இல்லையா?

நடிகை அனுஷ்கா தமிழில் 'ரெண்டு' என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் புகழ் பெற காரணமாக இருந்த படம் 'அருந்ததி'.

நான் டாக்டர் இல்ல, டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்

பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர்.

பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும்