close
Choose your channels
evp_raaga
kappan_us

அபிராமியால் டென்ஷன் ஆன முகின்: உடைந்த பிக்பாஸ் வீட்டின் பொருட்கள்

Monday, August 5, 2019 • தமிழ் Comments

கடந்த வாரம் முழுவதும் கவின், சாக்சி, லாஸ்லியா முக்கோண காதல் அனைவருக்கும் திகட்டும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஓடிய நிலையில் இந்த வாரம் இந்த அலை சற்று ஓய்ந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக முகின் - அபிராமி மோதல் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இந்த மோதலுக்கும் சாக்சியே காரணம் என தெரிகிறது.

இதுநாள் வரை அபிராமியுடன் நெருக்கமாக இருந்த முகின், திடீரென சாக்சியுடன் நெருக்கமாவதால் அதிர்ச்சி அடையும் அபிராமி, சாக்சியை குறை கூறுவது போல் இன்றைய முதல் புரமோ வீடியோவில் இருந்தது. இதனையடுத்து இரண்டாவது புரமோவில் முகினுடன் அபிராமி தன்னுடைய நிலையை எடுத்து கூறுகிறார். இதனால் டென்ஷன் ஆகும் முகின், அங்கிருந்த டேபிளை ஓங்கி தட்ட, அது உடையும் அளவுக்கு இருந்தது முகினின் கோபம். இதனை பார்த்து அபிராமி மேலும் அழ மீண்டும் ஒரு காதல் சர்ச்சை தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

இவற்றையெல்லாம் ஒன்றுமே தெரியாதவர் போல் சாக்சி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது இன்றைய புரமோவின் ஹைலைட். முகின் இதுவரை பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்து கொண்டிருந்த நிலையில் இந்த விஷயத்தில் அவர் பெயர் டேமேஜ் ஆகிவிடும் அபாயம் இருப்பதாகவும், அவர் இந்த வாரம் நாமினேசனில் சிக்கினால் சாக்சி, அல்லது முகின் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz