சாக்சி, அபிராமி, மோகன் வருகை: கவின் மட்டும் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் சாக்சி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவிருப்பதாக நேற்றே நாம் பார்த்தோம். அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

சாக்சியை ஷெரினும், அபிராமியை லாஸ்லியாவும், மோகன் வைத்யாவை சாண்டி, முகின் ஆகியோர்களும் கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். சாக்சியை சேரனும் வரவேற்கின்றார். ஷெரின் இந்த விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று சாக்சி வாழ்த்துகிறார். ஆனால் இந்த மூவரின் வருகையை கவின் மட்டும் அதிர்ச்சியோடு ஒரு ஓரமாக இருந்து பார்த்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது கவின் குழுவில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் லாஸ்லியா என ஐந்து பேர் இருக்கின்றனர். இந்த ஐந்து பேர்களையும் வனிதா ஒருவரே மிக எளிதில் சமாளித்துவிடுவார் என்றாலும் தற்போது அவருக்கு மேலும் சாக்சி, அபிராமி என இருவர் ஆதரவளிக்க வந்துள்ளனர். எனவே இனிமேல் வாக்குவாதம் ஏற்பட்டால் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேரன் வழக்கம்போல் இரு அணியிலும் பட்டும் படாமல் இருப்பார் என்றும் மோகன் வைத்யா தனது கட்டிப்பிடி வேலையை மட்டும் சிறப்பாக செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்தேசிய விருது என்ற உயரம் பெற்ற சேரனும், பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற ஷெரினும்

வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்: மைக்கை கழட்டி போட்ட வனிதா!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வனிதா நுழைந்ததில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது தெரிந்ததே. வனிதாவின் வத்திகுச்சி வேலையால் சாக்சி

'ஜீவி' கதாசிரியர் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் அறிவிப்பு

வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜீவி'. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில்

விஜய்க்கு நெருக்கமான ஸ்டில் போட்டோகிராபர் சாலை விபத்தில் மரணம்!

நடிகர் விஜய்க்கு நெருக்கமானவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞருமான ஸ்டில் கேமராமேன் சிவா என்பவர் நேற்று தேனி அருகே விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.

இணையதளம் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் அறிவிப்பு

தற்போது திரையரங்கு டிக்கெட்டுக்கள் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம்