close
Choose your channels

நீ லூசா? லூசு மாதிரி நடிக்கிறியா? மீராவை வெளுத்து வாங்கிய சாக்சி!

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன் உடம்பு முழுவதும் நயவஞ்சகத்தால் உருவாக்கியது போல் நடந்து கொள்கிறார். சில நிமிடங்களுக்கு முன் பேசியதை பேசவே இல்லை என்றும், பேசாததை பேசியதாகவும் கூறுவதில் வல்லவராக உள்ளார். கடந்த ஞாயிறு அன்றே கமல் முன்னிலையேயே தர்ஷன் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசி அனைவரையும் எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

இந்த நிலையில் இன்றும் அதுபோல் திடீரென தனது பச்சோந்தித்தனத்தை சாக்சியிடம் காட்டியுள்ளார். தன்னை எல்லோரும் குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர். எனவே எல்லோர் முன்னிலையிலும் நான் என்னுடைய தன்னிலை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேப்டன் சாக்சியிடம் கூறிய மீரா, இதற்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யவும் கூறியுள்ளார்.

மீராவின் பேச்சை நம்பி மீட்டிங் ஏற்பாடு செய்த சாக்சியிடமே நான் மீட்டிங் ஏற்பாடு செய்யவே சொல்லவில்லை, நீயாகத்தான் மீட்டிங் அரேஞ்ச் செய்தாய் என மீரா திடீரென பல்டி அடிக்க, கடும் கோபமான சாக்சி, 'நீ லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? என வெளுத்து வாங்கினார். இதனையடுத்து வழக்கம்போல் தனது கண்ணீர் நாடகத்தை மீராமிதுன் நடத்துவதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவடைந்துள்ளது

மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் மீராவை வைத்து நிகழ்ச்சியை பிக்பாஸ் சுவாரஸ்யமாக கொண்டு சென்றுவிடுவார் போல் தெரிகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.