close
Choose your channels

கவினை ஓப்பனாக நாமினேட் செய்யும் சாக்சி: தீராத பிரச்சனை

Monday, July 29, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டின் காதலர்கள் என்று கூறப்பட்டு வந்த கவின் -சாக்சி ஜோடி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக இருவரும் முட்டி மோதி வருகின்றனர். குறிப்பாக கவின் சொல்வதை புரிந்து கொள்ளாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டு சாக்சி நடந்து கொள்வதுதான் பிரச்சனைக்கு பெரிய காரணமாக உள்ளது.

கடந்த வாரமே கவினுடன் சாக்சி சண்டை போட்டாலும், அவரை சாக்சி நாமினேட் செய்யவில்லை. ஆனால் கவின், சாக்சியை கடந்த வாரம் நாமினேட் செய்தார். இந்த நிலையில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் கவினை சாக்சி நாமினேட் செய்தார். 'சில விஷயங்களை கவின் தன்னிடம் ஓப்பனாக பேசியிருந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு பேசவில்லை என்று சாக்சி நாமினேஷனுக்காக காரணத்தை கூறினார்

சாக்சியின் நாமினேசனால் அதிருப்தி அடைந்துள்ள கவினுக்கு சேரன் ஆறுதல் கூறுகின்றார். மேலும் சாக்சி என்னென்ன பேசினார் என்பது எனக்கு தெரியும். அவர் என்னை நாமினேட் செய்தும், அவரது பெயரை தான் நாமினேஷன் செய்யப்போவதில்லை' என்று கவின் கூறுகிறார். 

கடந்த வாரமே மீராவினால் நூலிழையில் தப்பிய சாக்சி, இதேபோல் நடந்து கொண்டால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவது உறுதி என்றே தெரிகிறது. இந்த ஓப்பன் நாமினேஷனால் இன்னும் என்னென்ன பிரச்சனை வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz