சாண்டியிடம் பார்வையாளர் கேட்ட 'நச்' கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று தொலைபேசி மூலம் போட்டியாளர் ஒருவரிடம் ஒரு பார்வையாளர் கேள்வி கேட்பது இந்த சீசனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வழக்கமாகும். அந்த வகையில் இன்று ஒரு பார்வையாளர் சாண்டியிடம் ஒரு கேள்வியை கேட்கின்றார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைக்கும் சாண்டி, சண்டை என்று வரும்போது அதை விலக்கி வைக்காமல் வேடிக்கை பார்க்கின்றார் அல்லது ஒதுங்கி கொள்கிறார். நியாயத்திற்கு குரல் கொடுக்க வேண்டாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு 'இனிமேல் குரல் கொடுக்கின்றேன்' என்று கூறி சாண்டி சமாளிக்கின்றார்.

ஆனால் கமல் அவரை விடாமல், 'இனிமேல் குரல் கொடுப்பது இருக்கட்டும், இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய கேள்வி என்று கூற, அதற்கு சாண்டி, 'சண்டை நடக்கும்போது எப்படி அதில் தலையிடுவது என்றே தெரியாமல் இருந்தேன். ஒரே குழப்பமாக இருந்தது' என்று கூற அதை கேட்டு கமல்ஹாசனே சிரித்துவிட்டார்.

எனவே இனிவரும் சண்டைகளை தீர்த்து வைக்க சாண்டி முயல்வார் என தெரிகிறது. சண்டையை தீர்த்து வைக்க முடிவெடுத்தாலே அவரை சனி பிடித்துவிட்டது என்றுதான் அர்த்தம். இதுவரை நாமினேஷனில் சிக்காமல் நல்ல பெயர் எடுத்து வந்த சாண்டி, இனிமேல் என்ன ஆகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சின்னக்கவுண்டர் சரவணன், மங்காத்தா கவின்: பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த வார டாஸ்க் 'போடு ஆட்டம் போடு'. இந்த டாஸ்க்கின்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நாமினேஷன்: இந்த வாரம் சிக்கியவர்கள் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே

'தல 60' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

அமமுகவில் இருந்து விலகும் பிரபல தமிழ் நடிகர்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார் என்பதும், அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்

இதையெல்லாம் டிரெண்ட் செய்யலாமே! அஜித் விஜய் ரசிகர்களுக்கு அஸ்வினின் வேண்டுகோள்

சமூக இணையதளம் என்பது மிகப்பெரிய ஆயுதம் என்பதும், இதனால் சாதிக்க முடியாத பல விஷயங்களை சாதிக்கலாம் என்பதும் பல நிகழ்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.