close
Choose your channels

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா: சாண்டி செய்த கலாட்டா!

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கட்டிப்பிடி வைத்தியம், முத்த வைத்தியம் மற்றும் அழுகைக்கு சொந்தக்காரரான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நேற்று அனைவரிடமும் விடைபெற்றபோதும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மோகன் வைத்யா எவிக்சன் ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரையும் வறுத்தெடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் வைத்யா வீட்டை விட்டு சென்றுவிட்டதால் அவரை மிஸ் செய்த போட்டியாளர்களுக்கு மோகன் வைத்யா போன்றே வேஷமணிந்த சாண்டிய செய்த கலாட்டா தான் இன்றைய அடுத்த புரமோ வீடியோ.

மோகன் வைத்யா போன்றே ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து சாண்டி செய்த கலாட்டாவால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும், சிலர் ஆச்சரியமும் அடைந்தனர். குறிப்பாக லாஸ்லியாவை சாண்டி கட்டிப்பிடிக்க வந்தபோது அதை அவர் தடுத்தவிதம் அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.