மீரா செய்யும் யோகாவை கிண்டல் செய்யும் சாண்டி-முகின்

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாத்திமாபாபு, ரேஷ்மா, மீரா மிதுன் மற்றும் மோகன் வைத்யா ஆகிய நால்வர் நேற்று வந்திருந்த நிலையில் இன்றும் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்கின்றனர். நேற்று அனைவரும் தங்கள் பிக்பாஸ் வீட்டின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் இரண்டு புரமோ வீடியோக்களில் முகினின் காட்சிகள் இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோ வீடியோவில் மீரா யோகா செய்து கொண்டிருக்க அவரை சாண்டியும், முகினும் கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் உள்ளன. மீராவிடம் சாண்டி, முகின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் திடீரென இருவரும் தவறாக நடந்து கொண்டது போல் தான் உணர்வதாக மீரா சொன்னாலும் சொல்வார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய மூன்று புரமோவிலும் முகின் இருப்பதால் ஃபைனலில் நடக்கவிருக்கும் எதையோ இந்த புரமோக்கள் குறிப்பிடுவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகின் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் நிச்சயம் அந்த டைட்டிலுக்கு தகுதியானவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.