close
Choose your channels
evp_raaga
kappan_us

வனிதாவா? வாத்தா? கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்

Tuesday, August 20, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் இன்று பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. சேரன், கஸ்தூரி ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவ, மாணவிகளாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த டாஸ்க்கிலும் வழக்கம்போல் சொதப்பிய கஸ்தூரி, வனிதாவை 'வாத்து' என்று கூப்பிட்டார். அவர் வேண்டுமென்றே கூப்பிட்டாரா? அல்லது வாய்தவறி கூப்பிட்டாரா? என்று தெரியவில்லை. வனிதாவை வாத்து கூறியதற்கு சாண்டி உள்பட மற்ற மாணவ, மாணவியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, வனிதா மட்டும் சும்மா விடுவாரா? கஸ்தூரி டீச்சர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்.

மாணவர்கள் தவறு செய்யும்போது டீச்சர் அவர்களை தண்டிக்கும்போது டீச்சர் தப்பு செய்யும்போது ஏன் தண்டிக்கப்படக்கூடாது என்று வழக்கம்போல் ஓங்கிய குரலுடன் கஸ்தூரிக்கு தண்டனை வழங்க சேரனிடம் வாதாடுகிறார் வனிதா. இதனால் சேரனுக்கு தர்மசங்கடமாக உள்ளது. 

சேரன் இந்த பஞ்சாயத்தை நடுநிலை தவறாது முடிப்பாரா? அல்லது வெண்டைக்காய் வெட்ட சென்று விடுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

Get Breaking News Alerts From IndiaGlitz