என்னால முடியல, நான் விட்டுக்கொடுத்துடறேன்: வனிதா

பிக்பாஸ் என்பது ஒரு கேம், இதில் விட்டுக்கொடுப்பதற்கோ, செண்டிமெண்டுக்கோ இடமில்லை என்று கூறிய வனிதா இன்றைய நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விட்டுக்கொடுத்தது முரண்பாடாக உள்ளது.

கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் வனிதா, தர்ஷன், லாஸ்லியா ஆகிய மூவரும் கலந்து கொள்கின்றனர். சேரன் வெளியேற்றப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த வனிதா, இந்த டாஸ்க்கில் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாகவும், இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறி வெளியேறினார். அதேபோல் தர்ஷனும் விட்டுக்கொடுக்க லாஸ்லியா வெற்றி பெறுகிறார். ஆனால் இருவரும் விட்டுக்கொடுத்த வெற்றி எனக்கு தேவையில்லை என்று லாஸ்லியா கூறுகிறார்.

உண்மையில் இந்த டாஸ்க்கை வனிதா விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் முடிவு செய்திருந்தால் இந்த டாஸ்க்கிலேயே அவர் கலந்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் இரண்டு கைகளிலும் தண்ணீர் உள்ள பவுலை ஏந்த முடியாது என்பதை புரிந்து கொண்ட வனிதா, இனிமேலும் டாஸ்க்கை தொடரமுடியாது என்ற நிலை வந்தவுடன் டாஸ்க்கில் இருந்து விட்டுக்கொடுத்து விலகுவது போன்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்த விரும்பால், லாஸ்லியாவிடம் தோல்வி அடைய விரும்பாமல், வனிதா விட்டுக்கொடுக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. போட்டியில் விட்டுக்கொடுக்க கூடாது என்ற அறிவுரையை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் தற்போது விட்டுக்கொடுத்தால் தான் விமர்சனம் செய்யப்படுவோம் என்று தெரிந்தும் வனிதா விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தர்ஷனால் இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்ய முடியும். அவர் வேண்டுமென்றேதான் லாஸ்லியாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாயமான விக்ரம் லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது: இஸ்ரோ சிவன் பரபரப்பு தகவல்

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கவிருந்த ஒருசில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

'விஸ்வாசம்' சாதனையை யாராலும் மறைத்துவிட முடியாது: பிரபல தயாரிப்பாளர்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த படம் செய்த வசூல் சாதனையை

சோகத்தில் மூழ்கிய நடிகை தேவயானி குடும்பம்

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் தான் நடிகர் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது

சேரன், வனிதாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் வனிதா, சேரன் ஆகிய இருவரையும் தர்ஷன் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய காட்சிகள் உள்ளன.

இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் காலமானார்!

ராபர்ட் ராஜசேகர் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவராகிய ராஜசேகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்