சாக்சியுடன் மோதிய வனிதா! லாஸ்லியாவை இழந்த கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதா குருப்பில் இருந்த சாக்சியை குறி வைத்துவிட்டார் வனிதா. லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டதை சாக்சி பெரிதுபடுத்தியதை சுட்டிக்காட்டிய வனிதா, எல்லோர் முன்னிலையும் சாக்சிக்கு அறிவுரை கூறுவது போல் அவரை மறைமுகமாக தாக்கியதால் சாக்சி அதிர்ச்சி அடைகிறார். இதில் ஒரு பெரிய கூத்து என்னவெனில் வனிதாவின் இந்த முயற்சிக்கு அவரது எதிரி மதுமிதாவும் ஜால்ரா போடுவதுதான்.

தேவையில்லாமல் தன்னுடைய பெயரை வனிதா இழுப்பதை பார்த்து லாஸ்லியா அதிர்ச்சி அடைந்தாலும் வனிதாவிடம் நேரடியாக மோத முடியாத காரணத்தால் அந்த இடத்தில் இருந்து கோபமாக வெளியேறுகிறார் லாஸ்லியா. அந்த கோபத்தை அதே வேகத்தில் கவின் மீது காட்டும் லாஸ்லியா, இனிமேல் என்னுடன் பேசாதே, எப்பவுமே பேசாதே என மனம் வெறுத்து கூறுவதால் கவின் ஒரு நல்ல நட்பை இழப்பதாகவே தெரிகிறது.

ஏற்கனவே கவினிடம் இருந்து விலகி இருக்கவே லாஸ்லியா முயற்சித்து வந்த நிலையில் இந்த பிரச்சனையால் கவினை அவர் முழுவதுமாக விலக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் வனிதா, லாஸ்லியாவுக்கு நல்லது செய்திருக்கின்றார் என்றே தோன்றுகிறது. இருப்பினும் வனிதா-லாஸ்லியா நேரடி மோதல் கூடிய விரைவில் வர வாய்ப்பு இருப்பதால் அந்த தருணத்தை பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

More News

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த யோகிபாபு!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பாட்டில்கேப் சேலஞ்சில் அசத்திய இன்னொரு தமிழ் நடிகர்!

கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள திரை நட்சத்திரங்களால் பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் நடிகர்களான ஜேசன் ஸ்டாதம்

ஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்

மது ஒழிப்புப் போராளி நந்தினி நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்தது

அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தாரா போனிகபூர்?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜித்துடன் போனிகபூர்