வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்: மைக்கை கழட்டி போட்ட வனிதா!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வனிதா நுழைந்ததில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது தெரிந்ததே. வனிதாவின் வத்திகுச்சி வேலையால் சாக்சி, அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் மட்டும் கிராமத்துக் கலைகளின் டாஸ்குகளால் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்த வாரம் தொடங்கியவுடனே கடந்த வாரத்திற்கும் சேர்த்து மொத்தமாக வனிதா தனது வேலையை தொடங்கியுள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களையும் கடுப்பாக்கிய வனிதா, இன்றும் அதனைத் தொடர்ந்து வருகிறார். சேரனும் ஷெரினும் பிக்பாஸ் போட்டியில் வெல்ல தகுதியற்றவர்கள் என கவின் கூறியதாக ஆவேசம் அடையும் வனிதா, 'வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்' என ஆத்திரமாக கூறி மைக்கை கழட்டி தொங்க விட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் எமோஷனலுக்கு இடம் இல்லை என்று அடிக்கடி கூறி வரும் வனிதா, தற்போது எமோஷனலாக பேசியது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் 'வனிதாவை ஏன் பிக்பாஸ் மீண்டும் கொண்டு வந்தீர்கள்? என்று கேட்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டு வருகிறார். இந்த வாரம் முழுவதும் வனிதாவின் ஆவேச ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை வனிதாவிடம் இருந்து அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்' என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

'ஜீவி' கதாசிரியர் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் அறிவிப்பு

வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜீவி'. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில்

விஜய்க்கு நெருக்கமான ஸ்டில் போட்டோகிராபர் சாலை விபத்தில் மரணம்!

நடிகர் விஜய்க்கு நெருக்கமானவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞருமான ஸ்டில் கேமராமேன் சிவா என்பவர் நேற்று தேனி அருகே விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.

இணையதளம் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் அறிவிப்பு

தற்போது திரையரங்கு டிக்கெட்டுக்கள் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம்

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும்,

சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார்.