பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர். இந்த ஐவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்டுவார்கள்

இந்த நிலையில் தற்போது வரை கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் கவின் உள்ளார். அவரை அடுத்து சாண்டி, தர்ஷன் ஆகிய இருவரு ம் உள்ளனர்

ஷெரின் மற்றும் வனிதா ஆகிய இருவரும் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். குறிப்பாக மிக குறைந்த வாக்குகளை மட்டுமே வனிதா பெற்றுள்ளார். எனவே இந்த வாரம் வனிதா வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஒரு முறை மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை போட்டியின் விறுவிறுப்பை கருதி மீண்டும் பிக்பாஸ் அழைத்து வந்தார். ஆனால் வனிதாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கு மீண்டும் எரிச்சலைக் கிளப்பியது. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது, தான் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பது, மற்றவர்களை பேசவிடாமல் இருப்பது ஆகியவை போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தியது

குறிப்பாக ஷெரின், தர்ஷன் விவகாரத்தில் வனிதா கொஞ்சம் ஓவராக நடந்துகொண்டதால் வனிதாவின் மீதான வெறுப்பு அதிகமாகியது. இதனால்தான் அவருக்கு இரண்டாவது முறை வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தாமல் வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக வனிதா சரியாக விளையாடினாலும் இதனை அவர் ஆரம்பத்தில் இருந்தே செய்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இன்று இரவு வரை வாக்குகள் பதிவு செய்யப்படும் என்பதால் ஏதாவது அதிசயம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

சசிகுமாரின் புகழ்பெற்ற கேரக்டரில் அடுத்த பட டைட்டில்

சசிகுமார் நடித்த முதல் திரைப்படமான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரின் பெயரே அவரது அடுத்த படத்தின் டைட்டில் ஆகியுள்ளது

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால்

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது

லான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஓலா, உபேர் வருகையும் மெட்ரோ ரயிலுமே

தலைவரிடம் இருந்து சர்ப்ரைஸ் வீடியோகால்: நடிகையின் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'தர்பார்' படத்தின் மும்பை படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக இருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.