close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

Saturday, August 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் விட்டில் இந்த வாரத்தின் எலிமினேஷன் பட்டியலில் முகின், அபிராமி, லாஸ்லியா, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். இதில் முகின் இந்த வாரம் படாதபாடு பட்டதன் விளைவாக அனுதாப வாக்குகள் குவிந்துள்ளதால் அதிகபட்ச வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே முகின் இன்று காப்பாற்றுப்படுவதாக கமல் அறிவிப்பார்.

முகினை அடுத்து லாஸ்லியா ஆர்மியினர் எடுத்து கொண்ட முயற்சியால் அவருக்கும் அதிக வாக்குகள் விழுந்துள்ளது. எனவே அவரும் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிவிடுவார் என தெரிகிறது

கவின் கடந்த சில வாரங்களில் சில தவறுகள் செய்தாலும் அவர் தனது தவறை உணர்ந்து தற்போது நேர்மையாக விளையாடி வருவதால் கவினை இப்போதைக்கு பார்வையாளர்கள் வெளியே அனுப்ப மாட்டார்கள்

மீதமுள்ளது மதுமிதாவும் அபிராமியும்தான். இருவரும் வனிதாவின் வருகைக்கு பின் ருத்ரதாண்டவம் ஆடினர். அபிராமி தேவையில்லாமல் முகினை காயப்படுத்தியது பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளது. மதுமிதா திடீரென பெண்ணுரிமை, ஆண்கள்-பெண்கள் பாகுபாடு குறித்து பாடம் எடுக்க வந்ததும், அவரது செயற்கைத்தனமான ஆவேசமும் ஓவர் ஆக்சனாக உள்ளது. மதுமிதாவுக்கு சேரன் சப்போர்ட் செய்வதையும் பார்வையாளர்கள் ரசிக்கவில்லை.

எனவே இந்த வாரம் அபிராமி அல்லது மதுமிதா வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும், அபிராமி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்று மாலைக்குள் யார் வெளியேற போகிறார் என்பது தெரிந்துவிடும் என்றே கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.