பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் யார்?

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் தேர்வுக்கு சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூவர் தேர்வு பெற்றுள்ள நிலையில் இதில் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்யும் டாஸ்க் இன்று நடைபெறுகிறது.

இந்த டாஸ்க்கில் கேப்டன் பதவிக்கு போட்டியிடும் மூவரின் புகைப்படங்கள் ஒரு போர்டில் வைக்கப்படுகிறது. இதில் எந்த போட்டியாளரின் பெயர் முதலில் ஐந்து முறை தேர்வு செய்யப்படுகிறதோ, அவரே இந்த பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் என பிக்பாஸ் கூறுகிறார்.

இதனையடுத்து சேரனின் புகைப்படம் முதலில் ஐந்து முறை குறிப்பிடப்படுவதால் அவர் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கஸ்தூரி செல்ல வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வாரம் சேரன் கேப்டன் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. எனவே வனிதா, லாஸ்லியா, ஷெரின், கவின், தர்ஷன், சாண்டி, முகின் ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த வாரம் நாமினேஷனும் வாக்குகள் வித்தியாசங்களும் வித்தியாசமாக இருக்கும் என கருதப்படுகிறது.
 

More News

'இந்தியன் 2' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்டாக ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர்,

விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்'

ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது ஐங்கரன், 100% காதல், அடங்காதே, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில்

ரஜினி, விஜய், சூர்யா படங்களின் பாணியில் 'சாஹோ'

பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது அந்த படத்தின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது

இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர்