என்னால கூச்சமே இல்லாம மேடையில நிக்க முடியாது: கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு உடனே வெளியேறலாம் என்ற ஒரு வாய்ப்பை நேற்று பிக்பாஸ் வழங்கியவுடன் கவினை தவிர மற்ற போட்டியாளர்கள் யாரும் அந்த அறிவிப்பை கண்டு கொள்ளவில்லை.

ஆனால் கவின் சற்றும் யோசிக்காமல் ‘நாம் போறேன் தல’ என்று கூறி அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக லாஸ்லியா, சாண்டி கவினின் முடிவுக்கு அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் கவின் இருவரையும் சமாதானம் செய்தார். தான் வெளியே செல்வதற்கான காரணத்தை விளக்குவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய புரமோவில் ‘ஏன் திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தாய்’ என்ற சாண்டியின் கேள்விக்கு ‘என்னால் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு மேடையில் நிக்க முடியாது’ என்று கூறுகிறார். அவர் எந்த விஷயத்தை கூறுகிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. மேலும் எல்லோரும் சொன்னபடி இந்த கேமை கேமாக பாருங்கள். இன்னும் பத்து நாள் தான் முடித்துவிட்டு வெளியே வாருங்கள், பேசிக்கொள்ளலாம்’ என்று சாண்டியை சமாதானப்படுத்துகிறார் கவின். சாண்டி சமாதானம் அடைந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் கவின் தனது முடிவில் மன உறுதியுடன் இருப்பது போல் தெரிகிறது.

கவினின் இந்த முடிவுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா? நண்பர்களுக்கு விட்டுக்கொடுப்பதற்காக எடுத்த முடிவா? தான் செய்த தவறுகளுக்கு பிராயசித்தமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் தெரியவரும்.

 

More News

அஜித் பெயரை கூறியதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற 'தளபதி 64' நாயகி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்யை அடுத்து ரஜினியுடன் மோதும் கார்த்திக் 

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விஜய்க்கு தேசிய கட்சி ஆதரவு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஆளுங்கட்சியை அதிருப்தி அடைய செய்த நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள்