ஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி!

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

பிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய முதல் புரோமோ வீடியோவில் மீண்டும் ஆரி மற்றும் பாலாஜி சண்டை போடும் காட்சிகள் தான் உள்ளது

இன்றைய முதல் புரமோவில் பாலாஜி ஆரியிடம், ‘காதல் கண் கட்டுதே’ என்று கூறினீர்களே காதல் எனக்கு இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கூற அப்போது ஆரி, ‘இவ்வளவு தைரியமானவனாக இருந்தா அன்றைக்கு ஷிவானி அம்மாவிடம் பேசி இருக்க வேண்டியதுதானே என்று கூறியபோது பாலாஜி ’வெளியே இருந்தங்களுக்கு நான் கொடுத்த மரியாதை அது’ என்று ஆவேசமாக பதில் கூறினார்

அப்போது ஆரி, பாலாஜி ஆகிய இருவரையும் ரம்யா சமாதானப்படுத்திய போது ஆரி, ‘கூட்டிட்டு போங்க உங்க ப்ரெண்டை’ என்று கூறியபோது ரம்யா அதே கிண்டலுடன் ’ஓகே ஓகே தேங்க் யூ தேங்க் யூ மை டியர் ப்ரண்ட்’ என்று கூறியது எப்படி இருந்தது என்பதை பார்வையாளர்களின் மனநிலைக்கே விட்டுவிடுவோம்

இந்த நிலையில் ஆரி மீண்டும் ’நானா ஷிவானி டாப்பிக்கை எடுத்தேன், யார் ஷிவானி டாப்பிக்கை எடுத்தது? என்று கேட்க உடனே பாலா உச்சகட்ட ஆவேசமாக ‘ஷிவானி டாப்பிக்கை விடுய்யா.. ஷிவானி டாப்பிக்கை விடுய்யா.. என்று தலையணையை எடுத்து ஆரி மேல் அடிக்க போவது போல் தரையில் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பாலாஜியின் இந்த ஆவேசம் குறித்து கமல்ஹாசன் இன்று கேள்வி கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்

தமிழக காங்கிரஸில் முக்கிய பதவியை பெற்ற தமிழ் நடிகர்!

கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

ஆஸ்திரேலியாவில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி

எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட தயாரா? உதயநிதிக்கு சவால்விட்ட நடிகை!

வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதிக்கு சவால் விட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக முதல்வரிடம் 'வலிமை' அப்டேட்' கேட்ட அஜித் ரசிகர்: வைரல் வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் அரசியல்வாதிகளிடமும் ஒருசிலர் கேட்கும் கேள்விகள் காமெடியானதாக இருக்கும் என்பதும் இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது