நிஷாவிடம் கண்ணீர் சிந்திய ஆரி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் தருணம் வந்துவிட்ட நிலையில் இன்று சிறப்பு விருந்தினர்களாக எவிக்ட் ஆன அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்திருந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய சிறப்பு விருந்தினர்களின் வருகை காரணமாக பிக்பாஸ் வீடே குதூகலமும் கொண்டாட்டமாகவும் இருந்தது என்பது மட்டுமின்றி ஒருசில காட்சிகள் நெகிழ்ச்சியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக நிஷாவிடம் ஆரி தனியாக பேசிக் கொண்டிருந்தபோது தன்னை நான்கு முறை போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் நான் கூறிய அறிவுரையை புரிந்து கொள்ளாமல் நான் அவர்கள் மீது பொறாமைப்பட்டு சொல்வதாக தவறாக நினைத்துக் கொண்டார்கள் என்றும் கூறி வருத்தப்பட்டார். அப்போது அவருடைய கண்கள் கலங்கியது என்பதும் அவருக்கு நிஷா ஆறுதல் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘நான் இங்கே இருந்த 70 நாட்களில் நீங்கள் ஒருமுறை கூட பொறாமைப்பட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்றும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றும் நிஷா ஆரிக்கு ஆறுதல் கூறினார்.

இந்த 98 நாட்களில் மிக அரிதாகவே ஆரி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியுள்ளார் என்பதும், அவற்றில் ஒன்று இன்று நடந்த நிகழ்ச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலாஜிக்கு முழுதாய் சப்போர்ட் செய்த மீராமிதுன்: கொஞ்சநஞ்ச ரசிகர்களையும் குறைக்கும் முயற்சியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் கிட்டத்தட்ட ஆரி தான் என்று ரசிகர்களால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், 'பாலாஜிதான் ரியல் வின்னர்

இன்ஸ்டால்மெண்ட் எல்லாம் மாஸ்டருக்கு ஆகாது: 'மாஸ்டர்' ஆக்சன் புரமோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இடையில் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் புரோமோஷன் பணிகள் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது

பிக்பாஸ் குறித்து சுரேஷ் தாத்தாவின் அதிர்ச்சி பதிவு: வேதனையில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் வந்தார்கள்

எப்படி எங்க சர்ப்ரைஸ்? விஜய்-விஜய்சேதுபதி மோதும் அட்டகாசமான போஸ்டர்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

தமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் 407 ரன்கள் எடுத்தால்