பாலா-ஷிவானியை அடுத்து மேலும் ஒரு காதல் ஜோடி: கோர்த்துவிட்ட பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த ரொமான்ஸ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை தான் என்பதும் வெளியே சென்று விட்டால் புஸ்வானம் ஆகிவிடும் என்று தெரிந்தும் பார்வையாளர்கள் இந்த காதலை ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்னொரு காதல் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இன்று கொடுக்கப்பட்டுள்ள ’பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் பாட்டியின் இளைய மகன் மற்றும் இளைய மருமகளாக நடிக்கின்றனர். மேலும் இருவருக்கும் திருடர்கள் கேரக்டர்கள் கொடுக்கப்படுகிறது என்பதும், சோம்-ரம்யாவின் கூட்டாளி அதாவது மகளாக கேப்ரில்லா நடிக்கிறார் என்பதும் இவர்கள் மூவரும் சேர்ந்து வீட்டில் இருக்கும் பாட்டி பத்திரப்படுத்தி வைத்துள்ள சொத்து பத்திரத்தை திருடுவது தான் டாஸ்க் என்று கொடுக்கப்படுகிறது

சோம், ரம்யா, டாஸ்க்கை நிறைவேற்றுவதற்குள் உண்மையிலேயே ஜோடியாகிவிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு பக்கம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு காதல் உருவானால் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தலையில் பாட்டிலை உடைத்து நாமினேஷன்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் நாமினேஷன் இல்லை என்பதும் தெரிந்ததே

தீபாவளி வரை இலவச சினிமா: தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

பாலாஜி உண்மையிலேயே மிஸ்டர் இந்தியாவா? பரபரப்பு தகவல் 

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, தான் மிஸ்டர் இந்தியா என்று டாஸ்க் ஒன்றில் கூறினார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாகவும்

காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: கைக்கடிகாரத்தில் வீடியோ எடுத்த நாகர்கோவில் காசி!

காருக்குள் இளம் பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, அதனை கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதால்

படிக்காமல் இருக்கும் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா??? விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட 19 வயது சிறுமி!

தெலுங்கானா மாநிலத்தில் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத 19 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.