நாங்க தான் இனி உனக்கு அப்பா: அனிதாவுக்கு ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் அனிதா உள்ளே வரும் காட்சிகள் உள்ளன

அனிதா சமீபத்தில் தனது தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் நிலையில் அவர் சோகமாக உள்ளே வந்ததும் அவரது தந்தையின் மறைவு குறித்து ஏற்கனவே அறிந்திருந்த ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். குறிப்பாக வேல்முருகன் ’நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்’ என்று ஆறுதல் கூறுகிறார். அதேபோல் மற்ற போட்டியாளர்களும் ’அப்பாவை நினைத்து கவலைப்பட வேண்டாம், மனதை தைரியப்படுத்தி கொள்’ என்று அனிதாவுக்கு ஆறுதல் கூறும் உருக்கமான காட்சிகள் இந்த புரமோவில் உள்ளன

பின்னர் அனிதா அப்பா குறித்து பேசியது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கைதட்டி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்றைய அனிதாவின் வருகை ஹவுஸ்மேட்ஸ்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும், அனிதாவுக்கும் இது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் இன்றைய புரமோவில் ஒரு காட்சியில் கூட ஆரி மற்றும் பாலாஜி இல்லாதது ஏன் என்று புரியவில்லை. இதனையடுத்து ஆரி ஆர்மியினர் ‘என் தலைவன் ஆரி எங்கடா’ என்று கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது

More News

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன சுரேஷ் தாத்தா: ஆரி ரசிகர்களின் வேண்டுகோள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா மற்றும் அனிதா மட்டும் ஏன் வரவில்லை

விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்

பசுமாடு வேலி தாண்டியதால்… காலை துண்டாக வெட்டியக் கொடூரச் சம்பவம்!!!

மழைப் பருவம் என்பதால் தற்போது தஞ்சை பகுதியில் பயிர் சாகுபடி சூடுபிடித்து இருக்கிறது.

கொரில்லாவிற்கும் கொரோனா பாதிப்பு… தொடரும் பட்டியல்!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

10 மாநிலங்களுக்குப் பரவிவிட்ட பறவைக் காய்ச்சல்… பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!!!

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் உறுதிச் செய்யப்பட்ட H5N8 பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.