வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகள் கொண்ட மூன்று புரமோக்கள் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதோடு, நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையிலும் உள்ளது. புரமோவை பார்த்து நிகழ்ச்சியில் பல நாட்கள் ஏமாந்தது இருக்கின்றோம் என்பது வேறு விஷயம்

அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் ரம்யா மற்றும் ரியோ சண்டை குறித்து பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பட்டிமன்றம் நடக்கின்றது. பட்டிமன்றத்தின் தலைப்பு ’பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் மற்றும் ‘பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்’

’பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம்’ என்ற தலைப்பில் வேல்முருகன் உள்பட ஒருசிலர் பேசுகின்றனர். அதேபோல் ‘பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம்’ என அனிதா, ரியோ பேசுகின்றனர். அனிதா உண்மையிலேயே பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அவருடைய பேச்சில் அனல் பறக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த பட்டிமன்றத்தில் அறந்தாங்கி நிஷா பேசியபோது, ‘புரணி பேசறது அழகுங்க, ஒருவரது உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும்போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை வெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க’ என்று ஆவேசமாக பேசினார். அவருடைய பேச்சை மற்ற போட்டியாளர்கள் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி அமைதியுடன் கேட்டு வருகிறார்.

இந்த பட்டிமன்றம் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்!!!

காஷ்மீர் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் கும்பல் கடந்த

கொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு!!!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும்

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்

தெலுங்கானா மாநிலத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய வெங்காய வரத்து முற்றிலும் நின்று போனது.

பிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி!

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வயதான போட்டியாளர்கள் அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்து வாரங்களுக்குள் வெளியேற்றப்படுவார்கள்.

இன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு