close
Choose your channels

அர்ச்சனாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்: திருடனாக மாறும் பாலாஜி!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் பல சுவராஸ்யமாக இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க், ’பாட்டி சொல்லை தட்டாதே’.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வருவார்கள் என்று காத்திருக்கும் பாட்டிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைத்து வருகிறது. சொத்தை பிரித்து தருகிறேன், சொத்து வேண்டும் என்றால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் என்று பாட்டி கூறுவதாகவும், சொத்துக்களுக்காக பாட்டி வீட்டுக்கு குடும்பத்தினர் வருவது போலவும் டாஸ்க்கில் உள்ளது.

மேலும் சொத்து இருக்கும் பெட்டியை பாட்டி, பூட்டி வைத்திருக்கும் நிலையில் தன்னை யார் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு தான் சொத்து என்று கூறுகிறார். இதனையடுத்து அந்த பெட்டியில் உள்ள சொத்தை பெறுவதற்காக அனைவரும் பாட்டியை மாறி மாறி நன்றாக பார்த்து வருகிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அந்த பெட்டியில் உள்ள சொத்தை திருடுவதற்கு திட்டம் போடுகிறார். இதுதான் இன்றைய டாஸ்கின் கதை என்று பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அர்ச்சனா பார்ட்டியாக மாற, பாலாஜி சொத்தை திருடும் திருடனாக மாற வீடு ஒரே கலகலப்பாக இருக்கிறது. இந்த புரமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.