நானும் குரூப்ல சேர்ந்துகிறேன்; பாலா கலாய்ப்பது யாரை? 

பிக்பாஸ் வீட்டில் ஆரி தனித்திறமையுடன் எந்த குரூப்பிலும் இணையாமல் விளையாடி வருவதால் அவருக்கு வீட்டுக்குள்ளேயே எதிரிகள் அதிகமாகி வருகின்றனர். ஏற்கனவே அர்ச்சனாவும் அவரது ஆதரவாளர்களும் ஆரிக்கு எதிரிகளாகியுள்ள நிலையில் பாலாஜியும் அவருக்கு ஆதரவானவர்களும் அவ்வப்போது ஆரியை விமர்சனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் நாமினேஷனில் ஆரி கூறிய விஷயம் குறித்து பாலாஜி, ஆஜித், ரம்யா ஆகியோர் பேசுகின்றனர். அதில் பாலாஜி, ஆரியை கலாய்க்கும் காட்சிகளும் உள்ளன.

டைட்டில் வின் பண்ண எனக்கு தகுதி இல்லைன்னு ஆரி சொல்லியிருக்காரு. உன்னையும் சொல்லியிருக்காரு என்று ஆஜித்திடம் கூறும் பாலாஜி, ‘நான் அவர்கிட்ட கேட்டேனா, எனக்கு தகுதி இருக்கா, இல்லையான்னு என்று கூறினார். அப்போது ஆஜித், ‘70 நாட்களுக்கு பின்னரும் என்னை இன்வால்ட் இல்லை என்று ஆரி கூறுகிறார், இன்வால்ட் இல்லை என்றால் ஆடியன்ஸ்கள் வீட்டுக்குள் வைத்திருப்பார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார். அதேபோல் ரம்யாவும் ஆரியை குற்றஞ்சாட்டுகிறார்.

அப்போது பாலாஜி, இப்படியே போனால் நாமலும் குரூப் ஆகிவிடவேண்டியதுதான்’ என்று கூறி இனி நானும் குரூப்பிஸம் தான் பண்ணப்போறேன், என் குரூப்புல யாராவது சேரணும்னா சேர்ந்துகோங்க’என்று ஆரியை கலாய்க்கின்றார்’