அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று படுவிறுவிறுப்பாக இருந்தது. ஆரியின் கோபம், ஆரியை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்த போட்டியாளர்கள், அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருடைய குருப்பிஸத்தை வெளியே கொண்டு வந்த சனம், பாலாஜி என நேற்றைய நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று வரை ‘நீ என் மகன் போல’ என தாய்ப்பாசத்தை பாலாஜி மீது பொழிந்து வந்த அர்ச்சனா, நேற்று தன்னை பாலாஜி நாமினேட் செய்ததும் அவருடைய முகமே முழுக்க முழுக்க மாறிவிட்டது. குடம் குடமாக பொங்கிய தாய்ப்பாசம் திடீரென மறைந்து பாலாஜியை எதிரி போல் பார்க்க தொடங்கிவிட்டார்.

பாசம் என்ற மாஸ்க்கை போட்டு நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனாவை டார்கெட் செய்ய ஆரம்பித்த பாலாஜி இன்றைய முதல் புரமோவில் அவருடைய ஆதரவாளர்கள் யார் யார் என்பதை ஒப்பனாகவே சொல்லிவிட்டார். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் ’கேப்ரில்லாவுடன் வாதாடும் பாலாஜி, ‘எல்லாரும் என்மேல பழிபோட்டு என் பெயரை காலி பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க என்று கோபமாக பேசுகிறார். இந்த வாக்குவாதத்தில் திடீரென அர்ச்சனா நுழைய, அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் நடக்கின்றது. ஒரு கட்டத்தில் அர்ச்சனா அக்கா என பாலாஜி சொல்ல, என்னை அர்ச்சனா அக்கா என்று சொல்லாதெ, அர்ச்சனா என்று சொன்னால் போதும் என கையை நீட்டி அர்ச்சனா கோபமாக கூற, பாலாஜி தன்னுடைய வழக்கமான நக்கலில் ‘சரி அர்ச்சனா’ என்று மாஸாக கூறியது பார்வையாளர்களுக்கு செம விருந்தாக இருந்தது.

மொத்தத்தில் அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டி அவருடைய உண்மையான சொரூபத்தை பாலாஜி வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில் இனிவரும் நாட்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டாக்டர் பட்டம் முடித்தும் ரோட்டில் பிச்சையெடுத்த திருநங்கை… அவரது கனவை நனவாக்கிய பெண் காவல் ஆய்வாளர்!!!

மதுரையில் MBBS பட்டம் முடித்த திருநங்கை ஒருவர் தான் திருநங்கை என்பதை நிரூபிப்பதற்கான சான்றிதழை பெறமுடியாமல் தவித்து வந்து உள்ளார்.

புயல் எச்சரிக்கை கூண்டு எதற்கு ஏற்றப்படுகிறது? அந்த எண்களுக்கு அர்த்தம் என்ன???

பெரும்பாலும் புயல் காலங்களில் இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியாகும்.

அடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக 'நிவர்' புயல் உருவானது சற்றுமுன் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புயலின் காரணமாக சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழை கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது.

அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார்? நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் இருப்பதை முதல்முதலில் போட்டு உடைத்தவர் சுரேஷ் தான் என்றாலும் அதன் பிறகு குருப்பிஸம் இருப்பதாக அவ்வப்போது வலியுறுத்தி வருபவர்கள்

நாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேசன் படலம் நடந்த நிலையில்  அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.