'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களாக அமைதியாக இருந்த ஷிவானி, தனக்கு மிங்கிள் ஆவதற்கு கொஞ்சம் டைம் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் கூறியதுபோல் தற்போதுதான் கொஞ்சம் தேறி பேச ஆரம்பித்துள்ளார்.

அவர் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி பாலாஜியுடன் ரொமான்ஸ் செய்யவும் ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக பாலாஜியுடன் அவர் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தளபதி விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர். அச்சு அசலாக விஜய்-காஜல் அகர்வால் போலவே அவர்கள் ஆடும் ஆட்டம் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவே உள்ளது.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி, அந்த சீசன் முடியும் வரை எண்டர்டெயின்மெண்ட் செய்து கொண்டிருப்பார்கள் என்ற நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை பாலாஜி-ஷிவானி ஜோடி எண்டர்டெயின் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எடை குறைப்பு மட்டுமல்ல, இன்னும் பல மாற்றங்கள்: சிம்பு குறித்து இலக்கியா!

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 100 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருந்தார் என்பதும் அந்த எடையுடன் அவர் நடித்த ஒரு சில படங்கள் படுதோல்வி அடைந்தன என்பதும் தெரிந்ததே 

இளம் வீரர்களின் தோனி பாசம்: நெகிழ வைக்கும் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் தல தோனி மீது உள்ள அன்பு சிறிதளவுகூட ரசிகர்களுக்கு குறையவில்லை

ஜடேஜா அணிக்கு தேவையில்லையா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி மிக அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

பந்துவீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்

நீங்க என்ன பிக்பாஸ் அசிஸ்டெண்ட்டா? சம்யுக்தாவுக்கு எதிராக கிளம்பிய சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோவில் சனம்ஷெட்டியை சம்யுக்தாவும், அர்ச்சனாவை சனம்ஷெட்டியும் மாறி மாறி குறை சொல்லும் காட்சிகள் உள்ளன.