வேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாம் புரமோவில் அரக்கர்களும் ராஜ வம்சத்தினர்களும் மோதும் காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆரி, ஷிவானி, சுரேஷ், அர்ச்சனா, கேப்ரில்லா, ஆஜித் உள்ளிட்டோர் அரக்க, அரக்கிகளாகவும், சனம், சம்யுக்தா ,ரம்யா, சோம் சேகர், பாலாஜி, ரியோ, நிஷா உள்ளிட்டோர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறியுள்ளனர்
ராஜ வம்சத்தினர் அமைதியாக சிலைபோல் இருக்க வேண்டும் என்பதும், அவர்களை அரக்கர், அரக்கிகள் வெறுப்பேற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். வெறுப்பேற்றுவதற்கு சுரேஷ், அனிதா உள்ளிட்டோர்களுக்கு வெறுப்பேற்ற சொல்லித்தர வேண்டுமா என்ன? புகுந்து விளையாடுகிறார்கள்.
இந்த நிலையில் சுரேஷ் வேற லெவலில் மொட்டை அரக்கராகவே மாறி பாலாஜியை வெறுப்பேற்ற, ஒரு கட்டத்தில் பாலாஜி டென்ஷனாகி சுரேஷிடம் கத்த என இன்றைய இரண்டாம் புரமோவை பார்க்கும்போதே இன்று ஒரு பெரிய மோதல் காட்சி இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
#Day16 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/vfa3RqZGhF
— Vijay Television (@vijaytelevision) October 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments