close
Choose your channels

ஃபினாலே டாஸ்க்: பாலாஜியை வெறுப்பேற்ற வேற லெவல் கேம் ஆடும் கேபி!

Tuesday, January 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் மூன்றாவது சுற்று நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

இந்த சுற்றில் ஒருவர் பாட்டு பாடி அவர் பாடலை முடித்த பின்னர் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் மேடையை தொட வேண்டும் என்பது தான் டாஸ்க். முதலில் ஷிவானி பாட்டு பாடி முடித்தவுடன் அனைவரும் நடுவில் உள்ளதை தொட விரைகின்றனர். இதில் கேபி, பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய மூவரும் நான் தான் முதலில் தொட்டேன் என்று கூறுகிறார்கள். அப்போது கேப்டன் ரியோ ’யார் முதலில் தொட்டவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள், நேரம் கடந்து கொண்டிருக்கிறது என்று கூறிய நிலையில் தான் முதலில் தொட்டு விட்டதாக கூறிய கேபி, மற்றவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் அடுத்த பாடலை பாட ஆரம்பித்து விடுகிறார். இதனால் பாலாஜி வெறுப்படைந்து ’முதலில் யார் தொட்டது என்பதை முடிவு செய்த பின்னர் பாட்டு பாடு கேபி’ என்றும் கூறுகிறார். ஆனால் பாலாஜி சொல்வதை கண்டு கொள்ளாமல் அவரை வெறுப்பேற்றுவதற்காகவே பாடல் பாடி வேற லெவல் கேம் ஆடுகிறார் கேபி என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நேற்று ஆரி தன்னைப்பற்றி கூறியதாக ஒரு விஷயத்தை பாலாஜி கூற வரும் போது ’இப்பொழுது ஏன் இதை என்கிட்டே சொல்கிறாய்’ என்று பாலாஜியின் வாயை அடக்கினார் கேபி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் கேபி வேற லெவல் கேம் ஆடி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கேபி வேற லெவல் கேம் ஆனாலும் போர்டில் உள்ள ஸ்கோரை பார்க்கும்போது பாலாஜிக்குத்தான் 7 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.