close
Choose your channels

எம்ஜிஆர், சிவாஜியை தோற்கடித்த ஹவுஸ்மேட்ஸ்: பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடந்த சில நாட்களாக சவாலான டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன என்பதும் அந்த டாஸ்குகள் நிகழ்ச்சியை சுவராசியமாக மாற்றுகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் ஏற்கனவே 45 நாட்கள் தொடர்ச்சியான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கருப்பு வெள்ளை சினிமாவில் வரும் காட்சிகள் போல் நடித்துக் காட்ட வேண்டும் என்ற டாஸ்க் புதிதாக கொடுக்கப்படுகிறது

எம்ஜிஆர், சிவாஜி நடிப்பை தோற்கடிக்கும் அளவுக்கு மேல் ஹவுஸ்மேட்ஸ்கள் இந்த டாஸ்கில் நடித்து காட்டி அசத்தினர். குறிப்பாக ரியோ மற்றும் கேப்ரில்லாவின் நடிப்பும், பராசக்தி சிவாஜியின் நீதிமன்ற வசனத்தை முயற்சித்த நிஷாவின் நடிப்பும், ஆஜித் மற்றும் ரம்யா பாண்டியனின் அக்கா தம்பி பாச நடிப்பும், ஆரி மற்றும் சனம்ஷெட்டி, பாலாஜி மற்றும் சனம்ஷெட்டியின் நடிப்பும் அச்சுஅசலாக எம்ஜிஆர், சிவாஜியின் படங்களை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்தது

மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது என்பது போல் தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.