உங்களுக்கு எது சொன்னா சந்தோஷம்: கமல் கேள்விக்கு சுரேஷ் அளித்த பதில்!

  • IndiaGlitz, [Sunday,October 18 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாளான இன்று சுவராஸ்யமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இன்றைய மூன்று புரமோக்களும் கேள்வி எழுப்பியுள்ளன. இன்றைய இரண்டு புரமோவும் எவிக்சனை வைத்து ஓட்டிவிட்ட மூன்றாவது புரமோவும் சுமாரான காட்சிகளை கொண்டதாக உள்ளது

கேப்ரில்லாவுக்கும் பாலாஜி மற்றும் ஆஜித்துக்கும் இடையில் நடந்த பிரச்சனை குறித்து கமல் விசாரிக்கிறார். அதற்கு கேப்ரில்லா விளக்கமளிக்கின்ரார். அதன்பிறகு சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிக வலியை கொடுத்துவிட்டதாக தனது வருத்தத்தை கேப்ரில்லா பகிர்ந்து கொள்கிறார்.

அப்போது சுரேஷை கேப்ரில்லா ’தாத்தா’ என அழைக்க அதற்கு கமல் சுரேஷிடம், ‘உங்களை தாத்தா என்று நான் சொன்னால் பிடிக்குமா அல்லது தகப்பனார் என்று சொன்னால் பிடிக்குமா என்று கேட்க அதற்கு தாத்தா தான் பிடிக்கும் என்று சுரேஷ் சக்கரவர்த்தி பதிலளிக்கிறார் இந்த காட்சிகளோடு இன்றைய மூன்றாம் புரோமோ முடிவெடுக்கிறது

இன்றைய மூன்று புரமோக்களை விட அந்த புரமோக்களுக்கு நெட்டிசன்கள் பதில்கள் சுவாரஸ்யமாக உள்ளது. மீண்டும் ஒருமுறை தாத்தா சுரேஷ் பார்வையாளர்களின் மத்தியில் ஹீரோ ஆகிவிட்டார் என்பதையே அது காட்டுகிறது

More News

வெற்றிமாறன் படத்திற்கான சூர்யாவின் கெட்டப்? வைரலாகும் புகைப்படம்

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகிறது

முதலில் வெளியேறும் போட்டியாளர் யார்? சஸ்பென்ஸை உடைக்கும் கமல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று முதல் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்ற சஸ்பென்ஸை கமல்ஹாசன் உடைக்கிறார் 

வரலட்சுமி இயக்கும் முதல் படத்தை தயாரிக்கும் விஜய் பட நிறுவனம்!

'போடா போடி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை வரலட்சுமி, அதன்பின்னர் விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கமல்ஹாசன் முன் ரியோ முகமூடியை கிழித்த சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 13 நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று எவிக்சன் பிராசஸ் நடைபெற உள்ளது. இன்றைய எவிக்சனில் ரேகா வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சுரேஷ் சக்கரவர்த்தியின் இன்னொரு முகம்: ஆச்சரிய தகவல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் இருக்கின்றோமா இல்லையா என்று தெரியாமலேயே நான்கைந்து போட்டியாளர்கள் உள்ளனர்.