close
Choose your channels

சுரேஷ் வெளியேற்றம், எஸ்பிபி வீடியோ: இன்றைய செண்டிமெண்ட் எபிசோட்!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனால் இந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் சென்டிமென்ட் எபிசோட் ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்த வாரம் சுரேஷ் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பதால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எஸ்பிபியின் வீடியோ ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாகவும் அதை பார்த்து கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்கள் நெகழ்ச்சியுடன் இருக்கும் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்னர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து குறித்த வீடியோ இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மொத்தத்தில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம், எஸ்பிபி ன்டிமென்ட் வீடியோ மற்றும் சுரேஷ் வெளியேற்றத்தால் சக போட்டியாளர்களின் சோகம் ஆகியவற்றால் நிரம்பி இருக்கும் என்பதால் ‘தறுதலை’ உள்ளிட்ட பஞ்சாயத்துக்களுக்கு இடமில்லை என்றே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.